டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி, உடலில் தீ பரவி தந்தை - மகள் பரிதாப பலி.. நிச்சயதார்த்தத்திற்கு மண்டபம் முன்பதிவு செய்து வருகையில் சோகம்.!

டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி, உடலில் தீ பரவி தந்தை - மகள் பரிதாப பலி.. நிச்சயதார்த்தத்திற்கு மண்டபம் முன்பதிவு செய்து வருகையில் சோகம்.!


karnataka-bangalore-manganahalli-father-daughter-died-e

திருமண நிச்சயதார்தத்துக்கு மண்டபம் முன்பதிவு செய்து வந்த தந்தை - மகள் டிரான்ஸ்பார்மர் வெடித்த தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், ஞானபாரதி மங்கனஹள்ளியில் வசித்து வருபவரை சிவராஜ் (வயது 55). இவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் சைதன்யா (வயது 19). இவர் பி.யூ.சி பயின்றுள்ளார். சைதன்யாவிற்கும் - இளைஞருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். 

இவர்களின் திருமண நிச்சயம் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடக்க தேதி குறிக்கப்பட்ட நிலையில், சிவராஜ் அதற்கான பணிகளை கவனித்து வந்துள்ளார். மேலும், மங்கனஹள்ளியில் உள்ள திருமண மண்டபத்தை முன்பதிவு செய்வதற்காக, நேற்று தந்தையும் - மகளும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். 

karnataka

மண்டபத்தை முன்பதிவு செய்துவிட்டு இருவரும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த நிலையில், மங்கனஹள்ளி முக்கிய சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் பலத்த சத்தத்துடன் தீப்பிடித்து வெடித்து சிதறியுள்ளது. அப்போது, அவ்வழியே சென்ற சிவராஜ் மற்றும் சைதன்யாவின் உடலில் தீப்பிடித்து எரிந்துள்ளது. அவர்களின் இருசக்கர வாகனமும் நாசமாகியுள்ளது.

படுகாயமடைந்து உயிருக்கு போராடிய தந்தை - மகளை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக அரசு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதி செய்தனர். நேற்று நள்ளிரவில் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.