காதலனின் மிரட்டலுக்கு பயந்து இளம்பெண் தற்கொலை; காதல் பழக்கம் கதைமுடித்த சோகம்.. அதிர்ச்சி பின்னணி.!

காதலனின் மிரட்டலுக்கு பயந்து இளம்பெண் தற்கொலை; காதல் பழக்கம் கதைமுடித்த சோகம்.. அதிர்ச்சி பின்னணி.!


Karnataka Bangalore Love Girl Suicide 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் புறநகர், ஜிகினா பகுதியில் வசித்து வரும் தம்பதியின் மகள் சந்திரகலா (வயது 19). இவர் பி.யு.சி பயின்றுவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளைஞர் அருண். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. 

இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வரவே, இவர்களின் காதல் விவகாரமும் இருதரப்பு பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அருண் வீட்டினர் இக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, சந்திரகலாவின் பெற்றோர் அருணின் பெற்றோரரை சந்தித்து பேசி இருக்கின்றனர். 

அவர்கள் சந்திரகலாவின் பெற்றோரரை அவதூறாக பேசி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயம் குறித்து சந்திரகலா தனது காதலர் அருணிடம் கேட்டு இருக்கிறார். இதற்கு பதிலளித்த அருண், தனது சகோதரிக்கு திருமணம் செய்த பின்னர் நாம் திருமணம் செய்யலாம் என பெற்றோர் கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். 

இதுமட்டுமல்லாது சந்திரக்கலாவை விட்டு அருண் மெல்ல விலக தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் அருணின் சகோதரிக்கு திருமணமும் நடைபெற்று முடிந்துள்ளது. இதன்பின்னரும் அருண் சந்திரகலாவை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அருண் சிறைக்கு சென்று வந்தவர், அவரின் நடவடிக்கை சரியில்லை என சந்திரகலாவின் பெற்றோர் கூறி இருக்கின்றனர்.  

இதனால் மனம் வருந்தி மாறிய சந்திரகலா, உறவுக்கார இளைஞரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதால் நிச்சயமும் நடைபெற்றுள்ளது. இந்த தகவலை அறிந்த அருண், அடிக்கடி சந்திரகலாவை நேரில் சந்தித்து பேசி வந்துள்ளார், திருமணத்தை நிறுத்த மிரட்டியதாகவும் தெரியவருகிறது. இல்லையேல் கொலை செய்திடுவேன் எனவும் கூறியுள்ளார்.  

இதனால் பயணத்தில் இருந்த சந்திரகலா, தனது பாட்டியின் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக கோனனகுண்டே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அருண் மிரட்டி வந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அருணையும் தேடி வருகின்றனர்.