பேருந்து - லாரிக்கு நடுவில் சிக்கிய டெம்போ.. அப்பளம்போல நசுங்கி 9 பேர் துள்ளத்துடிக்க மரணம்.. அடுத்தடுத்து மோதி பயங்கரம்.!



karnataka-arisikere-accident-9-died

 

சாலையில் சென்றுகொண்டு இருந்த லாரி - பேருந்துக்கு இடையே டெம்போ ட்ராவலர் வாகனம் சிக்கிக்கொண்டதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அரிசிகெரெ பகுதியில் நேற்று இரவு பால் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி - அரசு பேருந்து மற்றும் டெம்போ வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில், டேங்கர் லாரிக்கும் - அரசு பேருந்துக்கும் இடையே சிக்கிய வேன் அப்பளம் போல நசுங்கிப்போனது. டெம்போ ட்ராவலர் வாகனத்தில் பயணித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

karnataka

மேலும், எஞ்சிய 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அடுத்தடுத்து உயிரிழந்தனர். 

படுகாயத்துடன் உயிருக்கு துடித்துக்கொண்டு இருந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.