#Breaking: ஆஸ்கரில் மிகப்பெரிய அதிர்ச்சி.. இந்திய படங்கள் தேர்வு இல்லை.. ஷாக் தகவல்.!
படிக்க சேட்டை செய்த 4 வயது குழந்தை.... மனிதாபிமானமின்றி அடித்து கொன்று புதரில் வீசிய பெற்றோர்.!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிங்பம் மாவட்டம், பிரிகோரா கிராமத்தை சேர்ந்தவர் உத்தம் மைத்தி (வயது 27). இவரின் மனைவி அஞ்சனா (வயது 26). தம்பதிகளுக்கு 4 வயதில் மகள் இருக்கிறார். பெண் குழந்தையை அருகேயுள்ள பள்ளிக்கூடத்தில் படிக்க விட்டுள்ளனர். குழந்தை சரிவர படிக்காமல் இருந்துள்ளளது.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் குழந்தையின் கை-கால்களை கட்டிவைத்து அடித்துள்ளனர். இதனால் குழந்தை மயக்கமடையவே, அருகேயுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். ஆனால், மருத்துவமனைக்கு சென்ற சில நிமிடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதனால் பதற்றமடைந்த பெற்றோர், குழந்தையை எடுத்துக்கொண்டு இரயில் ஏறி ஹாலுத்தி நகருக்கு சென்றுவிடவே, இரயில் நிலையம் அருகேயிருந்த புதரில் குழந்தையின் உடலை வீசிவிட்டு சென்றுள்ளனர். பின்னர், சம்பவம் நடந்து 1 வாரம் கழிந்து ஊருக்கு திரும்பி, அக்கம் பக்கத்தினரிடம் குழந்தை காணவில்லை என்று பொய்யுரைத்துள்ளனர்.
இவர்களின் பேச்சுக்களில் மர்மம் இருப்பதாக நினைத்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தம்பதியிடம் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.