மெய்சிலிர்க்க வைக்கும் வீரம்! தன் உயிரைக் கொடுத்து 5 பேரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்; குவியும் பாராட்டு.!

மெய்சிலிர்க்க வைக்கும் வீரம்! தன் உயிரைக் கொடுத்து 5 பேரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்; குவியும் பாராட்டு.!


jammu-khasmir---river-incident---death---roob-ahamed-th

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பகல்காம் பகுதியில் சுற்றுலா வழிகாட்டியாக இருப்பவர் ரூப் அகமது தார். குல்காம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரிடம் கடந்த வெள்ளியன்று 2 வெளிநாட்டு பயணிகள் உட்பட 5 சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்காக அணுகியுள்ளனர். இதனை தொடர்ந்து லிடார் ஆற்றுப்பகுதியில் ஆறு பேரும் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது அடித்த பலத்த காற்றால் நிலைகுலைந்த அவர்களது படகு ஆற்றில் கவிழ்ந்து உள்ளது.

KASHMIR

இதனால் அனைவரும் ஆற்றில் மூழ்கி உள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத தார் கண நேரத்தில் அவர்கள் அனைவரையும் மீட்டு படகில் ஏற்றி உள்ளார். ஆனால் கடைசியில் ஆழமான சேற்றுப்பகுதியில் சிக்கி கொண்ட அவரால் மீண்டு வர இயலவில்லை. இதனால் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. பிறகு அவர்கள் மேற்கொண்ட தேடும் பணியில் வெள்ளி இரவு வரை அவரது உடல் கிடைக்கவில்லை. அதன் பிறகு பவானி பாலத்தின் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

KASHMIR

தனது உயிரைக் கொடுத்து ஐந்து பேரின் உயிரைக் காப்பாற்றிய அகமது தாரின் வீரம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. மேலும் காஷ்மீர் மாநில அரசு அவருடைய இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் வழங்கியது.

தன் உயிரை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகளின் உயிரை காப்பாற்றிய அகமது தாரின் வீரத்திற்கு என் சல்யூட். அல்லாஹ், அவருக்கு சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை அளிப்பார் என்று நம்புகிறேன். என்று தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.