காசு இல்லனா அப்போ என் வீட்டுக்கு தனியா வா.. பெண்ணிடம் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்திய போலீஸ் அதிகாரி கைது..

காசு இல்லனா அப்போ என் வீட்டுக்கு தனியா வா.. பெண்ணிடம் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்திய போலீஸ் அதிகாரி கைது..


jaipur-police-acp-arrested-over-abuse-complaint

புகார் கொடுத்த பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்திய போலீஸ் உதவி கமிஷனர் கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்க, சிறப்பு பிரிவின் அதிகாரியாக உள்ள போலீஸ் உதவி கமிஷனர் கைலாஷ் போஹ்ரா என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த பெண் கொடுத்த புகார் குறித்து விசாரிக்காகாமல் அவரை அலைக்கழித்துள்ளார்.

இதனால் அந்த பெண் சம்மந்தப்பட்ட அதிகாரியை சந்தித்து முறையிட்டபோது, தனக்கு லஞ்சம் கொடுத்தால் வழக்கை விசாரிப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே, தனது ஆசைக்கு இணங்குமாறும், தனியாக தனது வீட்டிற்கு வருமாறும் கைலாஷ் போஹ்ரா அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி யிடம் புகார் கொடுத்துள்ளார். பின்னர் டி.ஜி.பி யின் பரிந்துரையின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், கைலாஷ் போஹ்ராவை கைது செய்து அவரை விசாரித்துவருகின்றனர்.