இந்தியா

தனது தந்தையை 1200 கி.மீ சைக்கிள் அமரவைத்து அழைத்துச் சென்ற இந்தியச் சிறுமி.. பிரமித்துப்போய் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் போட்ட ட்வீட்..!

Summary:

Ivanka trump praises indian girl

தனது தந்தையை 1,200 கி.மீ தூரம் சைக்கிளில் வைத்து அழைத்துவந்த 15 வயது சிறுமிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளும் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட புலம்பெயர் தொழிலார்கள் நடந்தும், சைக்கிளிலும், கிடைக்கும் வாகனங்களில் ஏறியும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையியல், ஹரியானா மாநிலம் குர்கோவான் நகரில் இருந்து காயமடைந்த தனது தந்தையை 1,200 கி.மீ தூரம் சிறுமி ஒருவர் சைக்களில் அமரவைத்து 7 நாட்கள் கடந்து சொந்த ஊருக்கு அழைத்துச்சென்ற தகவல் சமூக வலைத்தளங்கள் மூலம் உலகம் முழுவதும் வைரலானது.

இந்நிலையில் ஜோதி குமாரி என்ற அந்த 15 வயது சிறுமியின் திறமையை உணர்ந்த தேசிய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பின் தலைவர் ஓங்கர் சிங் அவர்கள் ஊரடங்கு முடிந்ததும் அந்த சிறுமியை டெல்லிக்கு அழைத்து பயிற்சி கொடுக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த சிறுமியின் தியாகத்தையும், திறமையையும் போற்றும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளும் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 

ஜோதிகுமாரி என்ற அந்த 15 வயது 10 நாட்களில் 1200 கிமீ தொலைவை சைக்களில்  கடந்தது மட்டும் இல்லாமல், சைக்கிளின் பின்புறத்தில் தனது தந்தையை வைத்து சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார். சகிப்புத்தன்மை மற்றும் இந்திய மக்களின் அன்பின் அழகான சாதனை தன்னை கவரவைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement