வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் ! அதன் சிறப்பு என்ன தெரியுமா?

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் ! அதன் சிறப்பு என்ன தெரியுமா?


isro launches pslv c47


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் மூலம் இந்தியாவின் ‘கார்டோசாட் 3’ செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

1625 கிலோ எடையுள்ள கார்ட்டோசாட் செயற்கைகோள் புவி வட்ட பாதையிலிருந்து 509 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும். அது அங்கிருந்து புவியின் புகைப்படங்களை அனுப்பும். வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியை தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

pslv c47

இந்த செயற்கைகோள் ஆனது பெரிய அளவிலான நகர பயன்பாட்டு திட்டம், கடற்கரையோர நிலங்களின் பயன்பாடு உள்ளிட்ட பணிகளுக்கும் பயன்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 5 ஆண்டுகள் வரை இந்த செயற்கைகோள் பயன்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.