இந்தியா உலகம்

உலக அளவில் சிறந்த தலைவருக்கான விருது.! சர்வதேச விருதை பெறுகிறார் பிரதமர் மோடி.!

Summary:

சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் மேம்படுத்துவதில் சிறந்த தலைவருக்கான விருதை பிரதமர் மோடி பெற்றுக்கொள்கிறார்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஆண்டுதோறும் "செராவீக் குளோபல் எனர்ஜி அண்டு என்விராய்ன்மென்ட் லீடர்ஷிப் அவார்ட்" எனப்படும், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில், சிறந்து விளங்கும் சர்வதேச தலைவருக்கு விருது வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான  சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் மேம்படுத்துவதில் சிறந்த தலைவருக்கான விருது பாரத பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விருதை இந்திய பிரதமர் மோடி இன்று (05.03.2021) பெற்றுக்கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிறரதமர் மோடி காணொலி காட்சி மூலம் முக்கிய உரை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலின் எதிர்காலம் குறித்த தலைமைத்துவத்தின் உறுதிப்பாடு, எரிசக்தி அணுகல், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான தீர்வுகளை இந்த விருது அங்கீகரிப்பதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Advertisement