அரிசி மாவு விற்கும் நிலைக்கு சென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அரிசி மாவு விற்கும் நிலைக்கு சென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!


indian-volleyball-team-captain-sell-rice-flour

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவதூரை பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ஒலிம்பிக் வீரர் இ.சுமேஷ். கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில், இந்திய கைப்பந்து அணியின் தலைவராக செயல்பட்டு ஜப்பான் அணியை தோற்கடித்து இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் வாங்கி கொடுத்தார்.

இவர் தலைமையிலான இந்திய அணி நாடு திரும்பியதும் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் அணியில் விளையாடிய  அணைத்து வீரர்களுக்கும் வேலை வழங்கப்படும் என்றும், மாநில அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பாக ரூ.20,000 பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

indian team

ஆனால், அறிவிப்பு வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் வேலையோ அல்லது வெகுமதியோ இன்றுவரை கொடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் தனது வயிற்று பிழைப்புக்காக சுமேஷ் அரிசி மாவு விற்று தனது வாழ்க்கையை நடத்திவருகிறார்.

இந்திய அணிக்கே தலைவராக இருந்த ஒரு வீரர் அரிசி மாவு விற்று பிழைப்பு நடத்திவரும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.