ஓசையின்றி இந்திய ராணுவம் படைத்துள்ள புதிய உலக சாதனை; என்ன தெரியுமா?

ஓசையின்றி இந்திய ராணுவம் படைத்துள்ள புதிய உலக சாதனை; என்ன தெரியுமா?


indian militry servise - new bridge - lea, ladak

நமது நாட்டிற்கு பாதுகாப்பு அரணாக விளங்குபவர்கள் இந்திய ராணுவ வீரர்கள் தான்.    இந்திய எல்லையில் கடும் பனியிலும் வெயிலிலும் இரவு பகல் பாராமல் தங்களது கடமையை தவறாமல் செய்து கொண்டு இருப்பதனால் தான் நாம் நிம்மதியாக உறங்க முடிகிறது. சிலவேளைகளில் நாட்டிற்காக தங்களது இன்னுயிரையும் இழக்கிறார்கள். 

இந்நிலையில் ஆபத்து காலங்களில் மக்களுக்கு உதவிட தொங்கு பாலம் அமைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பாலம் மக்களின் போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.



 

மைத்திரி பாலம் என பெயரிடப்பட்ட இந்த பாலம் கடந்த ஏப் 1ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்தியாவின் லே, லடாக் பகுதியில் அமைந்துள்ள இந்த பாலம் சுமார் 260 அடி நீளம் கொண்டது. இந்த பாலத்தை இந்திய ராணுவத்தினர் வெறும் 40 நாளில் கட்டமைத்துள்ளதால் உலக சாதனையாக கருதப்படுகிறது.