இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.! இந்திய படையினர் அதிரடி!indian-force-killed-5-pakistan-terrorist

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிறிக்கப்பட்டதை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. 

இந்நிலையில் பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊடுருவல்காரர்கள் கொல்லப்படுவது இதுவே முதல் முறை என தகவல் வெளியாகி உள்ளது.

Pakistan

இன்று அதிகாலை பிகிவிந்த் நகரமான தரனுக்கு அருகிலுள்ள தால் எல்லை  அருகே 4:45 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்தநிலையில் அப்பகுதியில் மேலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக இந்திய படையினரின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.