பாகிஸ்தான் சிறுமிக்கு இலவச அறுவை சிகிச்சை.. சாய்ந்த கழுத்தை நேராக்கிய இந்திய மருத்துவருக்கு குவியும் பாராட்டுக்கள்!Indian doctor treated Pakistan girl for free

பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுமி அஸ்பின் குல். இவர் 8 மாத குழந்தையாக இருந்த பொழுது அவர் கையிலிருந்து தவறி விழுந்ததால் கழுத்து பகுதி பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 12 ஆண்டுகளாக 90 டிகிரி சாய்ந்த கழுத்துடனே வாழ்ந்து வந்துள்ளார்.

அவரது பெற்றோர் அவருக்கு வெவ்வேறு விதமான சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்தும் எந்தப் பலனும் இல்லை. மேலும் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் செலவு செய்யவும் முடியவில்லை. ஆன்லைன் மூலம் நிதியை திரட்ட துவங்கிய அவர்கள் கடந்த 2021ஆம் ஆண்டு சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளனர்.

Asfeen gul

டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் பணி புரியும் ராஜகோபாலன் கிருஷ்ணன் என்ற மருத்துவர் அந்தப் பெண்ணிற்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதனை தொடர்ந்து சில மாதங்களாக செய்த சிகிச்சையின் பலனாக தற்பொழுது அந்தப் பெண்ணின் கழுத்து நேராகிவிட்டது.

இப்போது அந்தப் பெண்ணால் சகஜமாக பேசவும் சாப்பிடவும் முடிகிறது என பெற்றோர்கள் கூறுகின்றனர். தங்கள் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர் கிருஷ்ணன் ஒரு தேவதூதர் என அந்தப் பெண்ணின் பெற்றோர் புகழாரம் சூட்டுகின்றனர்.