#வீடியோ: இந்திய இராணுவத்தினருக்கு ராயல் சல்யூட்.. கர்ப்பிணி பெண்ணுக்கு பேருதவி செய்த அதிகாரிகள்..!



Indian Army Soldiers Help Pregnant Woman Went Platform Using Walking Over Bridge Video

இந்தியாவின் எல்லையில் தன்னுயிரை துச்சமென நினைத்து நாட்டிற்காகவும், நாட்டு மக்களின் பாதுகாப்புக்காகவும் குடும்பத்தை பிரிந்து தேசத்திற்காக பணியாற்றி வரும் இராணுவ வீரர்கள் வீரத்திற்கும், தீரத்திற்கும், பாசத்திற்கும், மனிதாபிமானத்திற்கு பெரும் புகழையே ஏற்படுத்தி வருகின்றனர். 

சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "சாலையை கடக்க உதவும் நடைமேம்பாலத்தில் கர்ப்பிணி பெண்ணொருவர், 2 பயண பைகளுடன் வருகை தந்துள்ளார். இவர் படிக்கட்டில், 2 பைகளை தூக்கிக்கொண்டு ஏற முடியாமல் தவித்து போய் இருக்கிறார். 

கர்ப்பமாக இருந்த காலத்தில் அவரால் எடையையும் தூக்க இயலாமல் தவிக்கவே, அவ்வழியாக சென்ற நபர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை. மற்றொருவரிடம் பெண்மணி உதவி கேட்டும் பலனில்லை. 

India

அப்போது, எதற்ச்சையாக வந்த 2 இராணுவ வீரர்கள் பணி தொடர்பாக பேசிக்கொண்டே செல்கிறார்கள். பெண்மணி ஓரமாக இருந்ததால் யாருக்காகவும் காத்திருக்கலாம் என எண்ணிய நிலையில், 1 இராணுவ வீரர் பெண்மணி கர்ப்பமாக இருப்பதை பார்த்து உதவி தேவையா என்று கேட்கிறார். 

பெண்ணும் நடைமேம்பாலம் வழியே ஏறி செல்ல வேண்டும் என்று தெரிவிக்கவே, இராணுவ அதிகாரிகள் பையை தூக்கி செல்ல முடிவெடுத்தனர். பெண்மணியால் நடக்க முடியாத சூழல் ஏற்படவே, சுதாரித்த அதிகாரிகள் அவரை தனது கைகளில் அமரவைத்து தூக்கி சென்றனர்". இந்த வீடியோ வைரலாகி மனிதாபிமானம் இன்னும் வாழ்கிறது, இந்தியன் ஆர்மிக்கு ராயல் சல்யூட் என்ற வாசகத்துடன் வைரலாகி வருகிறது.