உஷார் நிலையில் இந்திய ராணுவம்! அத்துமீறி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்!

உஷார் நிலையில் இந்திய ராணுவம்! அத்துமீறி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்!



Indian Army in alert


ஜம்மு-காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் ராணுவம், விமானப்படை, பாதுகாப்பு படையினர் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா அவையில் இன்று இரவு விவாதம் நடைபெறும் நிலையில், இவ்விவகாரத்தில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து, இந்திய எல்லையில் பாகிஸ்தான் ஊடுரு முயற்சிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீரின் பூஞ்ச் உள்ளிட்ட பகுதியில் அத்துமீறல் சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது. 

indian army

மேலும், பயங்கரவாத ஆதரவாளர்களை தூண்டிவிட்டு எல்லைப்பகுதியில் அமைதியை சீர்குலைக்கலாம் எனவும் பாகிஸ்தான் திட்டமிட்டது. ஆனால் பாகிஸ்தானை ஊடுருவ முடியாத வகையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. 

இந்திய ராணுவம் நடத்தும் பதில் தாக்குதலை ஐநா சபையில் குறிப்பிட்டு பேசலாம் எனவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற குழுக்கள் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், ராணுவம், விமானப்படை, பாதுகாப்பு படையினர் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.