இந்தியா

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்தியா! இந்திய வீரர்களின் அதிரடி தாக்குதல்!

Summary:

Indian Army defeated Pakistani infiltration attempt


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து உள்ளது. இந்திய வீரர்கள் நடத்தியத் தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் 2 பேர் கொல்லப்பட்டனர். 

ஆகஸ்ட் 5-ம் தேதி இந்தியா ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. காஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலளித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான  ராஜதந்திர உறவுகளை முறித்து  பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரை வெளியேற்றியது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹஜிபூர் செக்டார் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்குள் பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினர் கடந்த 10, 11, 12ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் ஊடுருவ முயற்சித்தனர். இந்திய பாதுகாப்பு படையினர் ராக்கெட் எறிகுண்டுகளை வீசி அவர்களின் ஊடுருவல் முயற்சியை முறியடித்துள்ளனர்.

ஊடுருவல் முயற்சியை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை உள்ளே அனுப்ப அந்நாடு முயற்சித்து வருகிறது. இந்திய வீரர்கள் நடத்தியத் தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் 2 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த ஆகஸ்டில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் 15 ஊடுருவல் முயற்சிகளை இந்திய ராணுவம் தடுத்து முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 


Advertisement