வைரல் வீடியோ: கொஞ்சம் விட்ருந்தா உயிரே போயிருக்கும்..! தண்ணீருக்கு நடுவே தத்தளித்த இளைஞர்..! ஹெலிகாப்டரில் மீட்ட விமானப்படையினர்.!

வைரல் வீடியோ: கொஞ்சம் விட்ருந்தா உயிரே போயிருக்கும்..! தண்ணீருக்கு நடுவே தத்தளித்த இளைஞர்..! ஹெலிகாப்டரில் மீட்ட விமானப்படையினர்.!


indian-air-force-chopper-today-rescued-a-man-at-khutagh

வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர் ஒருவரை இந்திய விமானப்படை வீரர்கள் ஹெலிக்கப்பட்டார் மூலம் மீட்கும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் பிளாஸ்பூர் அருகே குதாகத் என்ற அணை உள்ளது. இந்த அணை அருகே திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் வெள்ளபெருகில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் தண்ணீருக்கு நடுவே உள்ள மரத்தை பிடித்துக்கொண்டு தவித்து வந்தார்.

இந்த தகவல் உடனே இந்திய விமானப்படைக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மீட்பு குழுவினருடன் ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு வந்த இந்திய விமானப்படையினர் கயிறு கட்டி தண்ணீருக்கு நடுவே தத்தளித்த இளைஞரை பத்திரமாக மீட்டனர். இந்திய விமானப்படை வீரர்கள் அந்த நபரை மீட்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.