கொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவுக்கு உதவும் இந்தியா.! வெளியான அதிரடி அறிவிப்பு.!

கொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவுக்கு உதவும் இந்தியா.! வெளியான அதிரடி அறிவிப்பு.!



India sending medical equipment to china for corona

கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள வைரஸ் தாக்குதல் சீனா பெரும் பாதிப்படைந்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 1700 கும் மேலான மக்கள் உயிர் இழந்துள்ளனர். மேலும், சீனாவை தாண்டி உலக நாடுகளையும் இந்த வைரஸ் அச்சுறுத்திவருகிறது.

இந்நிலையில் வைரஸ் தாக்குதலால் தவித்துவரும் சீனா நாட்டிற்கு உதவி செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வைரஸ் தாக்குதல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட கூடிய மருத்துவ உபகரணங்களை விமானம் மூலம் சீனாவிற்கு அனுப்பு இந்தியா முடிவு செய்துள்ளது.

COVID-19

மேலும், மருத்துவ உபகரணங்களை இறக்கிவிட்டு திரும்பி வரும் விமானத்தில், சீனாவில் இருக்கும் இந்தியர்கள் விரும்பினால் நாடு திரும்பலாம் எனவும் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான நடைமுறைகள் குறித்து தெரிந்துகொள்ள பெய்ஜிங்கில் உள்ள தூதரகம் அறிவித்த அவசர தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.