இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பேர் உயிரிழந்தது எந்த மாநிலம் தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பேர் உயிரிழந்தது எந்த மாநிலம் தெரியுமா?


india-maharashtra-died-9-members

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலியில் தான் கொரோனாவால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வந்தனர்.

தற்போது இத்தாலியையும் தாண்டி வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கொரோனா தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு விழிப்புணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றனர்.

maharashtra

இந்தியாவில் இதுவரை இந்நோயால் 1300க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கேரளா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. ஆனால் அங்கு ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். ஆனால் பாதிப்பு எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிர மாநிலம் காணப்பட்டாலும் இறப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் இதுவரை 9 பேர் பலி ஆகியுள்ளனர். அதற்கு அடுத்த படியாக குஜராத் மாநிலத்தில் 6 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.