அரசியல் தமிழகம் இந்தியா

இந்தியாவில் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு..! பிரதமர் மோடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Summary:

India lock down extended two more weeks

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் இரண்டு கட்டமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சையாக பிரிக்கப்பட்ட உள்ளது. ஆரஞ்சு மற்றும் பச்சை மாவட்டங்களில் பல்வேறு தொழில்களுக்கு பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் போக்குவரத்துக்கு, மால்கள், திரையரங்குகள் என மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement