தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
பிறந்தநாளன்று நேர்ந்த கோரம்! பெற்றோரை இழந்து கதறித் துடிக்கும் 7 வயது சிறுமி! வெளியான வேதனையான சம்பவம்!
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ராஜா கவினி. இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு ரியா என்ற 7 வயது மகள் உள்ளார். இந்நிலையில் இந்த தம்பதியினர் அமெரிக்காவில் வசித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திவ்யாவிற்கு பிறந்தநாள். அப்பொழுது ராஜா, திவ்யா மற்றும் ராஜாவின் நண்பர் பிரேம்நாத் ராமநாதன் ஆகிய மூவரும் ரியாவை நடன பள்ளியில் விட்டுவிட்டு தாங்கள் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் வீட்டை நோக்கி காரில் சென்றுள்ளனர்.
அப்பொழுது தல்லாஸ் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த கார் ஒன்று வேகமாக சென்று திவ்யா ஓட்டிவந்த கார் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திவ்யா மற்றும் ராஜா உயிரிழந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்டதும் அனைவரும் கதறி துடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து திவ்யாவின் தந்தை கூறுகையில், திவ்யா கார் விபத்தில் சிக்கினால் என்ற விஷயம் தெரிந்த உடனேயே அவரது தாய் மயக்கமடைந்தார். அதனால் அவருக்கு இன்னும் திவ்யா இறந்த விஷயம் குறித்து எதுவும் கூறவில்லை.
மகள் மற்றும் மருமகன் இருவரும் இழந்தது எங்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது என கண்ணீருடன் கூறியுள்ளார். இந்நிலையில் மூவரின் சடலங்களையும் சொந்த ஊருக்கு கொண்டு வர ஒருவார காலம் ஆகலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.