இந்தியா டெக்னாலஜி

Breaking: மேலும் 47 சீன செயலிகளை தடைசெய்து இந்திய அரசு உத்தரவு..! பிரபலமான செயலிக்கும் விரைவில் தடை.?

Summary:

India bans 47 Chinese apps for data privacy violations

ஏற்கனவே 59 சீன செயலிகளை இந்திய அரசு தடைசெய்திருந்தநிலையில் தற்போது மேலும் 47 சீன செயலிகளை தடைசெய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையான்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக இருப்பதாக கூறி இந்திய அரசு கடந்த மாதம் டிக் டாக், ஹெலோ உள்ளிட்ட 59 சீனசெயலிகளை தடைசெய்தது.

இந்நிலையில் முன்னர் தடைசெய்யப்பட்ட 59 சீன செயலிகளிடன் சேர்த்து தற்போது மேலும் 47 சீன செயலிகளை இந்திய அரசு இன்று முதல் தடை செய்வதாக அறிவித்துள்ளது. இந்த 47 சீன செயலிகளும் முன்பு தடைசெய்யப்பட்ட சில செயலிகளின் பிரதிபலிப்பாக செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயனர் தனியுரிமையை மீறுவதற்காக மொத்தம் 275 செயலிகள் அரசாங்கத்தின் பார்வையில் இருப்பதாகவும், பப்ஜி உள்ளிட்ட சில முக்கிய செயலிகள் விரைவில் அரசாங்கத்தால் தடை செய்யப்படக்கூடிய பட்டியலில் இருப்பதாகக்  கூறப்படுகிறது.


Advertisement