அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
தகாத உறவு.. தட்டி கேட்ட மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்.!
பெங்களூரை அடுத்த பத்தரஹல்லி பகுதியில் மஞ்சுநாத் என்பவர் தனது மனைவி ராஷ்மி மற்றும் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி ராஷ்மி தனது மாமியார் நெஞ்சு வலியால் துடித்து மயங்கி உள்ளார் என்று தன் கணவரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு பதறிப்போன மஞ்சுநாத் தன் தாயை வந்து பார்த்த போது லட்சுமிம்மா உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து உறவினர்களுக்கு தெரிவித்து இறுதி சடங்குகள் நடந்து முடிந்தன. இந்நிலையில் தன் மனைவி ராஷ்மியின் நடவடிக்கையில் சற்று மாற்றங்கள் இருப்பதை மஞ்சுநாத் கண்டுபிடித்துள்ளார். இதனால் மஞ்சுநாத் பத்தரஹல்லி காவல் நிலையத்தில் தன் தாயார் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். மேலும் தன் தாய் இறப்பில் தன் மனைவி மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் ராஷ்மியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

மேலும் ராஷ்மியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஷ்மி தனது வீட்டின் மாடியில் வசிக்கும் அக்க்ஷய் என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதனை அறிந்த ராஷ்மியின் மாமியார் அவரை கண்டித்துள்ளார். மேலும் அக்க்ஷயுடன் பேசுவதை தொடர்ந்தால் தன் மகனிடம் விஷயத்தை சொல்லிவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதனால் கோபமுற்ற ராஷ்மி தனது கள்ளகதலனுடன் சேர்ந்து மாமியாரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். அதனை தொடர்ந்து ராஷ்மி தனது மாமியார் உண்ணும் உணவில் அதிக அளவு தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதை சாப்பிட்டு மயங்கிய மாமியாரை அக்க்ஷய் கழுத்தை நெரித்து கொன்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கொலை செய்ததை மறைக்கவே மாமியாருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதாக மஞ்சுநாத்திடம் கூறி நம்பவைத்தோம் என்று ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து ராஷ்மியை போலிஸார் கைது செய்தனர். மேலும் அக்ஷய் மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தகாத உறவால் மாமியாரை மருமகளே கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.