கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
கொரோனா அப்டேட்ஸ்.. இந்தியாவில் ஒரே நாளில் 4296.. மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய தமிழகம்!

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 67161 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா முழுவதும் 4296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67161 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 1943 பேருக்கும், தமிழகத்தில் 669 பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது. தற்போதைய நிலைமையில் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் 22171 பாதிப்புகளுடன் முதல் இடத்திலும், குஜராத் 8195 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்திலும் தமிழகம் 7204 பாதிப்புகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
இறப்பை பொறுத்தவரை மஹாராஷ்டிராவில் நேற்று மட்டும் 53 பேர் இறந்ததால் அங்கு பலி எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளது. அடுத்ததாக குஜராத்தில் 21 பேர் பலியானதில் 493 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 3 பேர் பலியாகி மொத்த எண்ணிக்கை 47 ஆக உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை நேற்று மட்டும் 111 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் மொத்த பலி எண்ணிக்கை 2212 ஆக உயந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 20969 பேர் குணமாகி 43976 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.