கொரோனா 4 ஆவது அலை பரவுகிறதா?.. ஐ.சி.எம்.ஆர் விளக்கம்.!

கொரோனா 4 ஆவது அலை பரவுகிறதா?.. ஐ.சி.எம்.ஆர் விளக்கம்.!


ICMR Says corona 4 th wave

இந்தியாவில் கொரோனா வைரஸின் 3 ஆவது அலை முடிவுக்கு வந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், கடந்த சில வாரமாக அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா பரவல் 4 ஆவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் காரணத்தால், மீண்டும் முகக்கவசம் அணிவது முதலில் அமல்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பல மாநிலங்களில் அதிகரித்த கொரோனா காரணமாக மீண்டும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்களிடையே நான்காவது கொரோனா அலை அச்சம் எழுந்துகொண்ட நிலையில், ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் சமீரன் பண்டா கொரோனா 4 ஆவது அலை தற்போதைக்கு பரவ வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.