இந்தியா

25 வயது இளம் பெண்..! குடும்பத்தினர் உட்பட 139 பேர் பாலியல் கொடுமை செய்த சம்பவம்.! திடுக்கிட வைக்கும் பகீர் குற்றச்சாட்டு.!

Summary:

Hydrabad girl abused by 139 members shock police complaint

25 வயது இளம் பெண் ஒருவர் தன்னை 139 பேர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றுடன் சென்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தன்னை 139 பேர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த புகாரில் கூறியுள்ளார்.

கணவனின் குடும்பத்தினர் 20 பேர் உட்பட, அரசியல்வாதிகளின் உதவியாளர்கள், வழக்கறிஞர்கள், மீடியா பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என 139 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இந்த புகார் மனு குறித்து 42 பக்கம் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாகவும், அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு அந்த பெண்ணிற்கு திருமணம் முடிந்து அந்த திருமணம் சில வருடங்களிலையே விவாகரத்தில் முடிந்துள்ளது. திருமணம் முடிந்து தனது கணவன் வீட்டில் இருந்தபோது தனது உறவினர்கள் 20 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த பெண் விவாகரத்து பெற்று தந்தை வீட்டிற்கு சென்றபிறகு மேலும் பலரால் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சுடப்பட்ட காயங்கள் இருப்பதாகவும், பலமுறை தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். 25 வயது இளம் பெண் ஒருவரின் இந்த பகீர் புகார் மனு தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement