பெண் மருத்துவரை கொலை செய்த பிறகு லாரியில் ஏற்றிச்செல்லும் வீடியோ காட்சி!hyderabad-rape-murder-cctv-shows-moment-woman-was-taken

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இது தொடர்பாக போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்திவந்த நிலையில் குற்றவாளிகள் தப்பித்துச்செல்ல முயற்சித்தபோது அவர்களை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.

Disha murder case

இதுகுறித்த விசாரணையில் நான்கு பேரும் பெண் மருத்துவரை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து லாரியில் கடத்திகொண்டுபோய் பாலியல் கொடுமை செய்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் பெண் மருத்துவரை லாரியில் கடத்திச்சென்ற CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மருத்துவரை ஏற்றிக்கொண்டு குறிப்பிட்ட லாரி சாம்ஸபாத் சுங்கச்சாவடியை கடந்துசெல்லும்போது அங்கிருந்த கேமிராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது.