இந்தியா Covid-19

20 நாட்களாக மது இல்லாமல் இருந்தவர்களுக்கு இலவசமாக மது வழங்கிய சம்பவம்..! ஊரடங்கு உத்தரவில் இளைஞர் செய்த காரியம்.!

Summary:

hyderabad-man-distributes-free-liquor-amid-coronavirus

ஊரடங்கு உத்தரவால் மது கிடைக்காமல் திண்டாடிய மது பிரியர்களுக்கு இளைஞர் ஒருவர் இலவசமாக மது பாட்டில்களை வழங்கியுள்ள சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான கடைகள், வணிகவளாகங்கள், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் குடிக்கு அடிமையான சிலர் மது கிடைக்காமல் தற்கொலை செய்துகொள்வது, வார்னிஷ், சானிடைசர் குடிப்பது இப்படி பல்வேறு சம்பவங்கள் நடந்துவருகிறது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள சம்பாபேட் பகுதியை சேர்ந்த குமார் என்ற இளைஞர், ஊரடங்கு உத்தரவுக்கு முன் தான் வாங்கி குவித்துவைத்திருந்த மது பாட்டில்களை குடிமகன்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளார். 20 நாட்களாக மதுவை பார்க்காமல் இருந்த பல குடிமங்கள் குமாரின் இந்த செயலால் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.


Advertisement