நாட்டையே உலுக்கிய ஐதராபாத் என்கவுண்ட்டர் போலியானது..! விசாரணைக்குழு அறிக்கை..!

நாட்டையே உலுக்கிய ஐதராபாத் என்கவுண்ட்டர் போலியானது..! விசாரணைக்குழு அறிக்கை..!


hyderabad-encounter-was-fake

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த 4 பேரை காவல்துறை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாக விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஹைதராபாத்தில் சந்தனபள்ளி டோல்கேட் அருகே கடந்த 2019ஆம் ஆண்டு பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை தாக்குதல் நடத்திய 4 பேர் அவரை கொலை செய்து அவரது உடலை எரித்தனர் அவர்கள் நால்வரையும் கைது செய்த காவல்துறையினர் அனைவரையும் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். 

இந்த என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்த உச.ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் மூன்று பேர் விசாரணை ஆணையத்தை கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் அமைக்கப்பட்டது. 6 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு விசாரணை ஆணையத்திற்கு மூன்று முறை கால அவகாசத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியது அதன்பின் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க விசாரணை ஆணையம் மேலும் கால அவகாசம் கோரியது.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இந்திரா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் விசாரணை ஆணையம் அறிக்கை சமர்ப்பிக்க மேலும் ஆறு மாத காலம் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர். 

இந்நிலையில் தற்போது ஐதராபாத்தில் நடந்த என்கவுன்டர் சம்பவம் போலியானது எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை கொலை செய்யும் நோக்கிலேயே என்கவுண்டர் நடத்தப்பட்டது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும், ஆணையம் பரிந்துரை வாங்கி உள்ளது.