இந்தியா

பெண் மருத்துவர் கொலைவழக்கில் மீண்டும் ஒரு புது திருப்பம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Summary:

Hyderabad doctor murder case latest update

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர். விசாரணைக்காக அழைத்து சென்றபோது குற்றவாளிகள் தப்பித்து செல்ல முயன்றதாகவும், அதனால் என்கவுண்டர் செய்ததாகவும் போலீசார் கூறியிருந்தனர்.

இதனை அடுத்து நான்கு குற்றவாளிகளின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ். சிர்புர்க்கர் தலைமையில் மூவர் அடங்கிய விசாரணை ஆணையத்தை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விசாரணை குழு விசாரணை அறிக்கையை 6 மாதங்களில் தாக்கல் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்டு சுட்டு கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களையும் மறு பிரேதப் பரிசோதனை செய்யுமாறு தெலங்கானா உயர்நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.


Advertisement