இந்தியா

ஆட்டோவில் நம்பிச்சென்ற கல்லூரி மாணவி.. புதருக்குள் வைத்து நாசம் செய்த ஆட்டோ ஓட்டுநர்.. ஆடைகளையும் எடுத்துச்சென்ற கொடூரம்..

Summary:

கல்லூரி மாணவி ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, மாணவியின் ஆடைகளையும் எடு

கல்லூரி மாணவி ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, மாணவியின் ஆடைகளையும் எடுத்துச்சென்ற கொடூரம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

ஹைதராபாத் சி.எம்.ஆர் கல்லூரியைச் சேர்ந்த ஒரு இளம் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று மாலை 6 மணியளவில் கல்லூரியில் இருந்து ஆட்டோ ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் வந்துகொண்டிருந்த ஆட்டோ ஜீடிமெட்லாவை அணுகும்போது, ​​அந்த ஆட்டோ டிரைவர் அந்த இளம் பெண்ணை அருகில் இருந்த புதர் ஒன்றுக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் அந்த மாணவியை துணி இல்லாமல் அங்கையே விட்டுவிட்டு ஆட்டோ ட்ரைவர் தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் புதர் அருகே இளம் பெண் ஒருவர் ஆடை இல்லாமல் மயக்க நிலையில் இருப்பதை கவனித்த உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை சிகிச்சைக்காக மேடபள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்  சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பாதிக்கப்பட்டவரின் அறிக்கையை பெற்று, சம்மந்தப்பட்ட குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆட்டோவில் வந்த கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement