இந்தியா

அட.. இப்படியொரு சைக்கோ கணவரா! மனைவி தூக்கிட்டு தற்கொலை! ரசித்து ரசித்து கணவன் செய்த மோசமான காரியம்!!

Summary:

அட.. இப்படியொரு சைக்கோ கணவரா! மனைவி தூக்கிட்டு தற்கொலை! ரசித்து ரசித்து கணவன் செய்த மோசமான காரியம்!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்மகுறு என்ற நகரில் வசித்து வந்தவர் கொண்டம்மா. இவரது கணவர் பெஞ்சலையா. இவர் தனியார் வங்கி ஒன்றில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். திருமணமாகி சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த இருவருக்குமிடையே நாளடைவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

கணவர் பெஞ்சலையா மனைவி மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அண்மையில் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மனமுடைந்த கொண்டம்மா சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

ஆனால் பெஞ்சலையா அவரை தடுக்காமல் தற்கொலை செய்து கொள்.. என கூறி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். பின்னர் அவர் தற்கொலை செய்வதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அவர் கொண்டம்மா தூக்கிட்டு துடிதுடித்து உயிரிழக்கும் வரை ரசித்து வீடியோ எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். 

இதற்கிடையில் கொண்டம்மா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்த நிலையில்  போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, மனைவி தற்கொலை செய்வதை  வீடியோ எடுத்து ரசித்த சைக்கோ பெஞ்சலையாவை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement