இந்தியா

அழகு மனைவியை பாலியல் தொழிலுக்கு விற்ற கணவன்! காரணத்தை கேட்டால் கடுப்பாயிடுவிங்க!

Summary:

Husband planed to sale her wife

டெல்லியில் தன்னுடைய மனைவியை பாலியல் தொழிலுக்கு விற்க முயன்ற கணவரை ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் சமீரா(வயது 28), மிக அழகான சமீராவை, சதாம்(வயது 32) என்பவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

திருமண வாழ்க்கை மிக சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நிலையில், சமீரா அழகாக இருந்ததால் வேறு யாருடனும் பழகி விடுவார் என்ற அச்சத்தில் சதாம் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.

வெளியில் எங்கு சென்றாலும் சதாம் உடன் செல்வது வழக்கமாம், அதேபோன்று வீட்டில் தனியாக இருக்கும் வேளையிலும் தொடர்ந்து கண்காணித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி சமீராவுடன் பேசிக்கொண்டிருந்த வியாபாரியுடன் சண்டை போட்டுள்ளார்.

பிரச்சனை பெரிதாகவே, அன்றிரவே சமீராவையும் கொன்றுவிட சதாம் திட்டம் தீட்டியுள்ளார்.

ஆனால் தான் மாட்டிக்கொண்டு சிறை அனுபவிக்க நேரிடும் என்ற காரணத்தால் பாலியல் தொழிலுக்கு விற்க முடிவு செய்துள்ளார்.

இதன்படி தரகர்களிடம் நடந்த பேரத்தில் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கு விற்க முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து குடும்பத்தினர்களை பார்க்க அழைத்து செல்கிறேன் என கூறி சமீராவை டெல்லி ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளார் சதாம்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சதாமை சுற்றிவளைத்து போலீசார் சத்தமாய் கைது செய்தனர், எதுவும் தெரியாத சமீரா, இத்தகவலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.


Advertisement