இந்தியா

நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்.. மனைவியின் தலையை சுவரில் மோதி பயங்கர கொலை.. கணவன் வெறிச்செயல்.!

Summary:

நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்.. மனைவியின் தலையை சுவரில் மோதி பயங்கர கொலை.. கணவன் வெறிச்செயல்.!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் அவரை கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவருடைய மனைவி மம்தா (வயது 30). தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், அரவிந்த் தனது மனைவி மற்றும் மகன்களுடன் சிக்பள்ளாப்பூர் டவுனில் வசித்து வந்துள்ளார். 

இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்ததை தொடர்ந்து, அரவிந்துக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் தகராறு முற்றியது. அப்போது ஆவேசமடைந்த அரவிந்த், மம்தாவின் தலையை பிடித்து சுவரில் வேகமாக முட்டியுள்ளார்.இதில் மயங்கி விழுந்த மம்தா பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது அங்கு மம்தா இறந்து கிடந்ததால், சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மம்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

பின் அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், அவர் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சுவரில் அடித்து கொன்றது தெரியவந்துள்ளது.


Advertisement