இந்தியா

முதல் இரவுக்கு காத்திருந்த மனைவி..! கணவன் செல்போனுக்கு வந்த மெசேஜ்..! திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி!

Summary:

Husband married another girl wife complaint

கேரள மாநிலம் பால்ராமபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஷாஜின் காந்தி. இவரது மனைவி நளினகுமாரி. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் நளினகுமாரி தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அந்த புகாரில் அவர், நானும் ஷாஜினும் கடந்த  2012ஆம் ஆண்டு  சந்தித்துக்கொண்டோம். எங்களுக்கு இடையே உள்ள பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. நான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இதுதெரிந்தும் ஷாஜின் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து கடந்த 2013ம் ஆண்டு எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணமான அன்றிரவு எனது கணவரின்  செல்போனுக்கு மெசேஜ் ஒன்று வந்தது. அதனை பெண்ஒருவர் அனுப்பியிருந்தார். பின்னரே எனக்கு அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மறுநாள்  நான் கேட்டதற்கு அவர் என்னை கடுமையாக அடித்தார்

அதுமட்டுமின்றி சில வருடங்களுக்கு முன்பு எங்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டபோது ஷாஜின் இரும்பு கம்பியால் அடித்து எனது கையை உடைத்தார். மேலும் கடந்த வருடம் வேறு ஒரு பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார். அவர் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டு அனைத்தையும் ஷாஜின் மறுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement