இந்தியா

பாவி.. நம்பி போனவரை இப்படி செஞ்சுட்டாங்களே! காதல் கணவருடன் காட்டிற்கு சென்ற பெண்ணிற்கு காத்திருந்த பேரிடி!

Summary:

தெற்கு டெல்லியை சேர்ந்த மைந்தன் கர்ஹி என்ற பகுதியை சேர்ந்தவர் 22 வயது நிறைந்த அனுஜ் குமார்

தெற்கு டெல்லியை சேர்ந்த மைந்தன் கர்ஹி என்ற பகுதியை சேர்ந்தவர் 22 வயது நிறைந்த அனுஜ் குமார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் கடந்த ஆண்டு கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கநிலையில் அவரது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் அனுஜ் மற்றொரு 30 வயது  நிறைந்த பெண்ணை காதலித்துள்ளார். பின்னர் அவர் அவரது நண்பர் ரம்ஜான் என்பவரது உதவியுடன் அந்த பெண்ணை கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த தகவல் அனுஜின் முதல் காதலிக்கு தெரிய வந்தநிலையில் அவர் சொந்த ஊரிலிருந்து அனுஜை பார்க்க வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் அனுஜ் அவரின் இரண்டாவது காதல் மனைவியை கொல்ல முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அனுஜ் அந்தப் பெண்ணை காட்டுக்கு அழைத்துச் சென்று அவரது நண்பர்கள் நவுஷாத் மற்றும் ரம்ஜான் என்பவர்களது உதவியுடன் அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். மேலும் அவரது உடலை அங்கேயே விட்டுவிட்டு போலிசாருக்கு போன் செய்து, இரு ஆண்கள் ஒரு பெண்ணை அழைத்துச் சென்று கொன்றதாகவும் அதனை தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் அனைத்து உண்மையும் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement