டிக் டாக் மனைவி! கடுப்பான கணவன்! கேள்விகுறியான 2 வயது குழந்தையின் வாழ்க்கை!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரசத்பேட் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கீதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் டிக் டாக்கில் வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் கீதா. டிக் டாக் வேண்டாம் என கணவர் பலமுறை கூறியும் அதை காதில் வாங்கிக்கொள்ளாத கீதா தனது குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியேறி விடுதியில் தங்கியுள்ளார்.
விடுதியில் இருந்தும் டிக் டாக் வீடியோ போடுவதை நிறுத்தாத கீதா விடுதியில் இருந்தும் டிக் டாக் வீடியோ போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குமார் விடுதிக்கு சென்று தனது மனைவியை சமாதானம் செய்வதுபோல் செய்து வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார்.
இதனை அடுத்து தனது சகோதரருடன் சேர்ந்து குமார் கீதாவை கொலை செய்து சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளார். இந்த சம்பவம் வெளியே தெரிந்ததை அடுத்து போலீசார் குமார் மற்றும் அவரது சகோதரரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.