இந்தியா

அவ ரொம்ப அழகா இருப்பா சார்! குத்தியே கொன்னுட்டேன்! சென்னை பயங்கரம்!

Summary:

Husband killed wife for misunderstanding

சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவீரன் வயது 48 . கேரளாவை சேர்ந்த சஜினி என்ற பெண்ணை கடந்த 21 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார் வெற்றிவீரன். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அழகுக்கலை நிபுணரான சஜினி மீது கணவருக்கு சந்தேகம் இருந்துவந்துள்ளது. ஒருநாள் சஜினி தனது உடலில் டாட்டூ குத்தி வந்துள்ளார், இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் கணவருடன் கோவித்துக்கொண்டு சஜினி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் 6 வருடம் கழித்து மனைவியை சமாதானம் செய்து சமீபாத்தில் வீட்டிற்கு கூட்டிவந்துள்ளார் வெற்றிவீரன். மகள்கள் இருவரும் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் கணவன் - மனைவி இடையே மீண்டும் சண்டை வெடித்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வெற்றிவீரன் அருகில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் வெற்றிவீரன். இதுகுறித்து அவர் கூறிய வாக்குமூலத்தில், எனது மனைவி மிக அழகாக இருப்பாள், அவள் மீது எனக்கு சந்தேகம் இருந்தது, அவள் உடலில் டாட்டூ குத்தியது எனக்கு பிடிக்கவில்லை, இதுகுறித்து ஏற்பட்ட சண்டையில் அவளை கொலைசெய்துவிட்டதாக வெற்றிவீரன் கூறியுள்ளார்.


Advertisement