வீடியோ காலில் பேசிய மனைவி! கண்ணிமைக்கும்நொடியில் துடிதுடிக்க கணவன் செய்த காரியம்! வெளியான அதிர்ச்சி சம்பவம்!



husband killed wife for doubt

ஹரியானா மாநிலம், குருகிராமம் பகுதியில் வசித்து வருபவர் சுனில் கோத்ரா. இவரது மனைவி முனேஷ் கோத்ரா. இவர் பாஜக கட்சியில் விவசாயிகள் முன்னணி பிரிவில் மாநில செயலாளர் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் சுனில்க்கு  தனது மனைவி முனேஷ் வேறு நபருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் முனேஷ் அடிக்கடி கட்சி விஷயம் தொடர்பாகவும், உறவினர்களிடமும் போன் பேசி வந்துள்ளார். இதனால் சுனிலின் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் முனேஷ் அவரது சகோதரியுடன் வீடியோகால் பேசிக் கொண்டு இருந்துள்ளார் அப்பொழுது அங்கு வந்த சுனில் தனது துப்பாக்கியால் மனைவியின் மார்பு பகுதியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

videocall

இதில் வலியால் துடிதுடித்த முனேஷ், இறுதியாக தனது சகோதரியிடம் கணவர் தன்னை சுட்டுவிட்டார் என கதறியபடியே உயிரிழந்துள்ளார் இதனைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முனேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியால் சுனில் தனது மனைவியை சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளா.ர் அவரை தீவிரமாக தேடி வருகிறோம் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.