இந்தியா காதல் – உறவுகள்

பிறந்தநாள் கொண்டாட்டம்! படுக்கைக்கு அடியே வந்த துர்நாற்றம்! அம்பலமான கணவரின் கொடூர காரியம்!

Summary:

husband killed wife

அரியானா மாநிலத்தில் வசித்து வந்தவர் லலிதா இவரது கணவர்  ராஜ்வீர், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் லலிதா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சண்டைபோட்டு கொண்டு, குருகிராமிற்கு சென்றுவிட்டார். மேலும் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் தந்தை ராஜ்வீருடன் விட்டு சென்றுள்ளார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்களது மகன் நிஷாந்திற்கு பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில்  லலிதா கலந்துகொண்டுள்ளனர். மேலும் அதற்காக தன்னுடைய கணவரின் வீட்டிற்கும் வந்துள்ளார்.இந்நிலையில் வந்த இடத்தில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே  கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பிரச்சினை வெடித்துள்ளது.

 

மேலும் அப்பொழுது குழந்தைகள் யாரும் வீட்டில் இல்லை. இந்நிலையில் பெரும் ஆத்திரமடைந்த ராஜ்வீர், மனைவி லலிதாவின் கழுத்தை நெரித்து துடிக்கத்துடிக்க கொலை செய்துள்ளார்.மேலும் இறந்த லலிதாவின் சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் படுக்கைக்கு கீழே மறைத்து வைத்துள்ளார். மேலும் குழந்தைகளும் அந்த படுக்கையில் உறங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில்  ராஜ்வீர் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அவரது பக்கத்து வீட்டுகாரர்கள் போலீசாருக்கு தகவலளித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீவிர சோதனை மேற்கொண்டு லலிதாவின் உடலை கைப்பற்றினர். மேலும் அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து ராஜ்வீரிடம் விராசரிகா நிலையில் அவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement