இந்தியா

பணத்திற்காக தன் மனைவியையே பாலியல் தொழில் செய்ய வற்புறுத்திய கணவன்.! பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Summary:

husband force wife to go wrong business

டெல்லியில் வசித்து வருபவர் ஜலீல் ஜெய்க். இவர் பாத்திமா சர்தார் என்ற இளம்பெண்ணை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் ஆனால் ஜலீல் ஜெய்க்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளது. மேலும் அவரது முதல் மனைவி மேற்குவங்கத்தில் வசித்து வந்துள்ளார். 

அதனை தொடர்ந்து அவருக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட ஜலீல் பணத்தின் மீது மிகுந்த பேராசை கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் ஜலீல் தனது மனைவியை விபச்சார தொழிலில் ஈடுபட கூறியுள்ளார்.

 இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஜலீல் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஒத்துக் கொள்ளாததால் பாத்திமாவை கொலை செய்து அவரை ஒரு கவரில் அடைத்து யாரும் இல்லாத பகுதியில் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்

இதனை தொடர்ந்து தகவலறிந்த போலீஸார் பாத்திமாவின் சடலத்தை மீட்டனர் மேலும் தீவிர விசாரணைக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருப்பதை அறிந்த போலீசார் அங்கு அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement