இந்தியா

கணவன் குடும்பத்தாரின் வெறிச்செயல்! பிளாஸ்டிக் டிரம்மில் வீட்டு உரிமையாளர் கண்ட கொடூர காட்சி! வெளியான பகீர் பின்னணி!

Summary:

Husband family killed wife and put into plastic drum

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் போய்சர் நகரில் உள்ள ஜெயின் என்பவரது வீட்டில் தீபக், அவரது மனைவி புல்பூல் தாய் பவன் ஜா, மற்றும் சகோதரி பச்சுதேவி ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.  மேலும் வாடகைக்கு வசித்து வந்த அவர்கள் திடீரென கடந்த ஆண்டு தங்களது சொந்த ஊரான ஹரியானாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் 18 மாதங்களுக்கு பிறகு வீட்டின் உரிமையாளர் ஜெயின், வீட்டை வேறு நபருக்கு வாடகைக்கு விடுவதற்காக வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு ஒரு அறையில் பிளாஸ்டிக் தண்ணீர்  டிரம்மில் எலும்புக் கூடு ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த எலும்புக்கூடு தீபக்கின் மனைவி புல்பூல் உடையதாக இருக்கலாம் என சந்தேகமடைந்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டு, புல்பூல் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார்களால் தாக்கப்பட்ட நிலையில் காவல்துறையில் புகார் அளித்திருந்துள்ளார். அதனால் போலீசார் தீபக்கை கைது செய்து பின்னர் ஜாமீனில் வெளியிட்டனர். அதனை தொடர்ந்து  தீபக்கின் குடும்பத்தினர் புல்பூலிடம் புகாரை வாபஸ் பெறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் அவர்கள் புல்பூல்லை கொன்று தண்ணீர் டிரம்மில் அடைத்துவிட்டு, தப்பி தங்கள் சொந்த ஊருக்கு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து போலீசார்கள் விரைந்து தீபக் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
பின்னர் குற்றவாளிகள் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement