இந்தியா

குழந்தை பெற்றுக்கொடுக்கல... நீ எனக்கு வேண்டாம்.. கணவன் செய்த பேரதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் சம்பவம்..!

Summary:

குழந்தை பெற்றுக்கொடுக்கல... நீ எனக்கு வேண்டாம்.. கணவன் செய்த பேரதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் சம்பவம்..!

திருமணம் ஆகி பல வருடங்கள் கடந்தும் குழந்தை பிறக்காததால் கணவன் முத்தலாக் கூறி விவாகரத்து பெற்ற சம்பவம் நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த முஸ்லீம் பெண்மணிக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு, பலுமத்தின் இஷ்தியாக் ஆலம் என்பவருடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தம்பதிகளுக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் வைத்து திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஷ்பூரில் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில், தம்பதிகளுக்கு தற்போது வரை குழந்தை இல்லாத நிலையில், இந்த காரணத்தை வைத்து பெண்மணியை ஆலமின் குடும்பத்தினர் தொந்தரவு செய்து வந்துள்ளனர். மேலும், குழந்தை பெற்று தா என பல சித்ரவதையும் நடந்து வந்துள்ளது. இதனால் ஒருகட்டத்தில் மனமுடைந்த பெண்மணி கடந்த 1 வருடமாக தனது தாயின் வீட்டில் வசித்து வருகிறார். 

சம்பவத்தன்று மனைவிக்கு தொடர்பு கொண்ட கணவர், அரசால் தடை செய்யப்பட்ட முத்தலாக் கூறி விவாகரத்து தெரிவித்துள்ளார். மனமுடைந்துபோன பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement