90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
வீட்டிலே முடங்கியதால் ஏற்பட்ட விபரீதம்! மனைவியின் முதுகெலும்பை உடைத்த கணவர்!

வடோதராவில் லூடோ விளையாட்டில் தொடர்ந்து மனைவியிடம் தோற்றதால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியின் முதுகெலும்பை உடைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கில் உள்ளதால் அனைவரும் வீட்டிலே முடங்கியுள்ளனர். வதோதரா அருகே வேமலி பகுதியை சேர்ந்த ஒருவர் நண்பர்களை சந்திக்க அடிக்கடி வெளியில் சென்றுள்ளார். அவரை வீட்டிலே இருக்க வைக்க அவரது மனைவி லூடோ விளையாடலாம் என்ன யோசனை கூறியுள்ளார்.
அதன்படி இருவரும் லூடோ விளையாடியுள்ளனர். அதில் தொடர்ந்து நான்கு முறை மனைவியே வெற்றிபெற்றுள்ளார். இதனால் கோபமடைந்த கணவர் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில் மனைவியின் முதுகெலும்பை உடைத்துவிட்டார் கணவர்.
வலியால் துடித்த மனைவி அருகில் இருந்த எலும்பு நிபுணரிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார். மேலும் 181 அபாயம் உதவி எண் மூலம் புகாரும் அளித்தார். அதன் பின்னர் கணவன் மனைவி இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.
கடைசியில் இருவரும் ஒரு வழியாக சமாதானம் அடைந்தனர். மனைவி கணவன் மீது வழக்கு பதியவில்லை. ஆனால் சில நாட்கள் அவரது தாயார் வீட்டில் தங்கிவிட்டு வர அனுமதி அளிக்குமாறு கேட்டு சென்றுள்ளார்.