விமானத்தில் இருந்து அதிரடியாக இறக்கிவிடப்பட்ட கணவன் மனைவி! அதிர்ச்சி காரணம்!
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியவர் நரேஷ் கோயல். அந்நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்துள்ளார். அவரது மனைவி நிர்வாக குழு உறுப்பினராக இருந்துள்ளார். அந்த நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக தடுமாறியது.
அந்த நிறுவனம் வாங்கிய வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமலும் ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாமலும் அந்த நிறுவனம் திணறியதால், அனைத்து விமான சேவைகளையும் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அந்த நிறுவனத்திற்கு வங்கிகள் நெருக்கடி கொடுத்ததன் காரணமாக, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல் விலகினார். மேலும் அவரது மனைவியும் பதவியை ராஜினாமா செய்தார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சம்பள பாக்கி வைத்துள்ளதால் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் , ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர், இயக்குனர்கள், நிர்வாக குழு உறுப்பினர்களின் பாஸ்போர்ட்டுகளை முடக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், நரேஷ் கோயல் தன் மனைவி அனிதாவுடன் துபாய் செல்வதற்காக மும்பை விமானநிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். அப்போது இருவரையும் குடியுரிமை அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்தனர். பின்னர், புறப்பட இருந்த விமானத்தில் இருந்து அவர்களை கீழே இறக்கி உள்ளனர்.