இந்தியா

மனைவியை மிரட்டுவதற்காக நண்பனை பலாத்காரம் செய்யவைத்த கணவன்!.

Summary:

மனைவியை மிரட்டுவதற்காக நண்பனை பலாத்காரம் செய்யவைத்த கணவன்!.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது நண்பனுடன் இணைந்து மனைவியை பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ள கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வந்த ராகேஷ் என்பவர் தனது மனைவியுடன் சண்டை ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தனர். இந்நிலையில் திடீரென ராகேஷ் தான் மனைவியிடம் உன்னுடன் பேச வேண்டும் எனக்கூறி அவரின் மனைவியை அவரது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

கணவனின் ஆசைவார்த்தையால் அவரின் பேச்சை கேட்டு அவரது வீட்டிற்கு வந்த மனைவிக்கு மயக்கமருந்து கலக்கிய குளிர்பானத்தை கலந்துகொடுத்துள்ளார். அதன்பிறகு, மனைவி மயக்கமடைந்ததும் தனது நண்பனுடன் இணைந்து மனைவியை பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோவாக எடுத்துள்ளார்.

இதனையடுத்து அவர் பதிவு செய்த வீடியோவை வைத்து மனைவியை மிரட்ட ஆரம்பித்துள்ளார். இதை யாரிடமாவது சொன்னால் இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

இதனால் கடும் வேதனையில் இருந்த மனைவி அவரின் சகோதரி உதவியுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.
 


Advertisement