வரிசையாக உடல்கள்..! மொத்தமாக ஒரே குழியில் வீசப்படும் கொரோனா சடலங்கள்..! பார்ப்போரை பதறவைக்கும் பகீர் வீடியோ காட்சி..!

வரிசையாக உடல்கள்..! மொத்தமாக ஒரே குழியில் வீசப்படும் கொரோனா சடலங்கள்..! பார்ப்போரை பதறவைக்கும் பகீர் வீடியோ காட்சி..!


Human dead bodies dumped video goes viral

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை ஒரே இடத்தில் தூக்கி வீசி புதைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

corono

இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. ஆனால், சில இடங்களில் அந்த நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதில்லை. கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை தூக்கி வீசுவது, பொக்லைன் இயந்திரத்தில் எடுத்து செல்வது போன்ற பல சம்பவங்கள் அரங்கேறிவருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பல்லாரியில் கொரோனாவால் உயிரிழந்த பலரின் உடல்களை ஒரே குழியில் சுகாதாரத்துறையினர் வீசு செல்லும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகிவருகிறது.