இந்தியா

காதல் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்! சுதாரித்துக்கொண்ட மாமியார்!

Summary:

huband killed wife and he was acting

குஜராத் மாநிலத்தில் மிஷ்பா என்கிற இளம்பெண் கடந்த 3 வருடங்களுக்கு முன் தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஷோயிப் என்கிற இளைஞரை சந்தித்துள்ளார். இந்தநிலையில் இருவருக்குமிடையே நட்பு ஏற்பட்டுள்ளது.
 
இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது மூன்று வருட காதல் வீட்டிற்கு தெரிந்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்த சில மாதங்களிலே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஷோயிப் மிஷ்பாவை வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வருமாறு வற்புறுத்தி வரதட்சணை கொடுமை செய்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மிஷ்பா, திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய தாய் வீட்டாருக்கு ஷோயிப் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால் மிஷ்பாவின் தற்கொலையை நம்பாத அவரது தாய் ஷோயிப் தன்னுடைய மகளை கொலை செய்துவிட்டதாக காவல்நிலையத்தில் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின்  பேரில் வழக்கு பதிவு செய்து ஷோயிப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவால்துறையினர்.


Advertisement