இந்தியா

பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை..! பாதி உடலை பிச்சு தின்ற நாய்கள்..! ஓசூர் பயங்கரம்..!

Summary:

Hosur baby died after 2 days born

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் சடலம் ஓன்று முள் புதரில் கிடப்பதாக அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாய்களில் பிச்சு திங்கப்பட்டு பாதி உடல் மட்டுமே இருந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடலில் பெரும்பாலான பாகங்களை நாய்கள் தின்றுவிட்டதால், அந்த குழந்தை ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று கூட கணிக்க முடியவில்லை. குழந்தையை இங்கே போட்டவர்கள் யார்? காதல் விவகாரத்தில் பிறந்த குழந்தையை இங்கு போட்டு சென்றார்களா?

அல்லது, மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால், பெற்றோர் யாரேனும் செய்த காரியமா என போலீசார் விசாரித்துவருகின்றனர். குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு குழந்தையின் பாலினம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement