அதிர்ச்சி! தலையில் சிறிதாக தோன்றிய புண். கடைசியில் கொம்பாக மாறிய சம்பவம்.

அதிர்ச்சி! தலையில் சிறிதாக தோன்றிய புண். கடைசியில் கொம்பாக மாறிய சம்பவம்.


Horn grows in head of a 74 years old man in madhya pradesh

இந்தியாவில் உள்ள மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஷாம். 74 வயதான இவருக்கு சிறுவயதில் தலையில் அடி பட்டுள்ளது. இதனால் பலவிதமான மருந்துகளை பயன்படுத்தி அந்த காயத்தை குணப்படுத்தியுள்ளார் ஷாம். காயம் குணமாகிவிட்டதாக சந்தோஷத்தில் இருந்த ஷாமுக்கு போக போக அதிர்ச்சி காத்திருந்தது.

அவருக்கு தலையில் அடிபட்ட இடத்தில் இருந்து சிறிதாக புடைப்பு ஏற்பட்டு அது நாளடைவில் கொஞ்சம் கொஞ்சம் வளர்ந்து 5 இஞ் அளவிற்கு பெரிய கொம்புபோல் வளர்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாம் மருத்துவர்களை நாடியுள்ளார்.

Mystery

அவரை சோதித்த மருத்துவர்கள் ஷெபேசியஸ் கார்ன் என அதற்கு விளக்கம் அளித்துள்ளனர். அறுவை சிகிச்சை மூலமே இதனை சரி செய்ய முடியும் என மருத்துவர்கள் கூற அதனை அடுத்து அறுவை சிகிச்சை நடந்துள்ளது. தற்போது தலையில் இருந்த கொம்பு போன்ற பகுதி நீக்கப்பட்டு ஷாம் நலமுடன் உள்ளாராம்.